|
அரசியல் கட்சிகளில் இளம் வெளிநாட்டவர் |
|
|
|
Monday, 12 September 2005 |
டென்மார்க்கில் உள்ள அரசியல் கட்சிகளில் வெளிநாட்டுப் பின்னணி கொண்ட இளைஞர்கள் அங்கத்தவராகச் சேரும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் இன்று இத்தொகை இரட்டிப்பாக உள்ளதாகவும் nதிரிவிக்கப்படுகிறது. சிறிய நகரங்களை விட பெரிய நகரங்களில் இந்தத் தொகை அதிகமாக இருக்கிறது. டி.எஸ்.யூ, வி.யூ போன்ற பிரதான கட்சிகளின் இளைஞர் அணிகளில் வெளிநாட்டு இளைஞர்கள் வரவு 2 முதல் 4 வீதம்வரை அதிகரித்துள்ளது. இவ்விதம் அரசியல் கட்சிகளில் இணைவோர் கூடுதலாக உயர் கல்வி, சமூகநலன் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தும் விவாதங்களில் அதிக அக்கறை கொள்கிறார்கள். ஆனால் முதன்மை கொடுத்து பேச வேண்டிய வெளிநாட்டவர் டேனிஸ் சமுதாயத்துடன் இணைதல் என்ற இணைவாக்க விவகாரத்தை இவர்களில் பலர் தொடவிரும்பாதவராக இருப்பதும் ஆச்சரியம் தருவதாயுள்ளது என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் டேனிஸ் அரசியலில் புதிய வெளிநாட்டு இளைஞர் இணைவதும், ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவான செயற்பாடுகளை பாPட்சார்த்தமாக அறிவதும் ஆரோக்கியமான விடயங்கள் என்று முக்கிய கட்சிகளின் இளைஞர் அணிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
Nirojan S
|