|
|
|
"பொதுமக்களை இலக்கு வைக்காத தாக்குதல்கள் பயங்கரவாதமல்ல.! "- டென்மார்க் நீதிமன்றம் |
|
|
|
Friday, 14 December 2007 |
|
ஐரோப்பிய
பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட 2 கொலம்பிய, பாலஸ்தீன அமைப்புகளுக்கு
உதவுவதற்காக அந்த அமைப்புக்களின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்த 7
நபர்களுக்கு எதிரான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில்
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன் குறிப்பிடப்பட்ட இரண்டு
அமைப்பும் டென்மார்க் சட்டங்களுக்கு அமைய பயங்கரவாத அமைப்புக்கள் அல்ல எனவும்
கூறப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருத்து கூறுகையில்,
தாம் இந்த வழக்கின் முலம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள் பயங்கரவாதிகள்
அல்ல என்பதையே வெளிக்காட்ட முயன்றதாகவும், அதில் தாங்கள் வெற்றி கண்டுள்ளதாகவும்
கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கருத்துக்
கூறுகையில் இந்த வழக்கின் தீர்ப்பானது ஐரோப்பிய பயங்கரவாத பட்டியலை மீள்
பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துவாக கூறினார். இந்த
வழக்pன் தீர்ப்பு தொடர்பாக கருத்து கூறிய பாராளமன்ற உறுப்பினர்கள் நோர்வோ போன்று
டென்மார்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலை தவிர்க்கலாம் என கூறினர்.
3
நீதிபதிகளால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் 2 நீதீபதிகள் குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான முறையில் தீர்ப்பளித்தனர். குறிப்பிட்ட அமைப்புக்கள்
தமது போராட்டத்தில் மேற்க்கொள்ளும் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றபோதும்
தாக்குதலின் நோக்கம் மக்களை கொலைசெய்வதோ, பீதியடையச்செய்வதோ அல்ல என அவர்கள் தமது
தீர்ப்பில் குறிப்பிட்டுளளனர்;. இந்த அமைப்புக்கள் இராணுவ மற்றும் துணை ராணுவத்தையே
இலக்கு வைத்து தாக்குவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டு, குற்றம்
சாட்டப்பட்டவர்களை விடுதலைசெய்து தீர்ப்பளித்தனர்.
எதிரியின் இராணுவ
பொருளாதார இலக்குகளை மட்டும் தேர்வுசெய்து தாக்கும் தமிழர்களின் காப்பரணான தமிழீழ
விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதும், தமிழீழ மக்கள்
மீது இலக்கு வைத்து விமானத்தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், படுகொலைகளை
போன்றவற்றை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கு இதே ஐரோப்பிய நாடுகள் உதவிசெய்வதும்
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
நெருடல் இணையம்
|
|