விடுதலைப் புலிகளின் பலத்தின்
அடிப்படையிலேயே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. `ஜெயசிக்குரு'
படை நடவடிக்கையின் படுதோல்வியை அடுத்து புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள்
தாக்குதல்களால் யாழ்.குடாநாட்டை அவர்கள் கைப்பற்றும் நிலை உருவானது.
வன்னியில் பலபடைத்தளங்கள் புலிகளிடம் வீழ்ந்ததும், ஆனையிறவு படைத்தளம்
அழிக்கப்பட்டதும், கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தகர்க்கப்பட்டதும் இந்த
உடன்பாடு கைச்சாத்திட பிரதான காரணிகளாய் அமைந்தன.