|
டென்மார்க்கில் உள்ள மக்கள் நித்திரை கொள்ளும் நேரம் குறைவானது ! |
|
|
|
Monday, 12 September 2005 |
 இதர ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டால் டென்மார்க்கில் உள்ள மக்கள் நித்திரை கொள்ளும் நேர அளவு குறைவானதாக இருப்பதாக புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளது. டென்மார்க்கில் நாடளாவிய hPதியில் சராசரியாக ஒரு பெண் உறங்கும் நேரம் 6 மணி 55 நிமிடங்களாக உள்ளது. ஆண் ஒருவரின் ஒரு நாளைய சாராசரி உறக்கம் 6 மணி 36 நிமிடங்களாகும். இங்கிலாந்தில் இது 7 மணி 23 நிமிடங்களாகவும், நோர்வேயில் 7 மணித்தியாலங்களாகவும், சுவீடனில் 7 மணி 12 நிமிடங்களாகவும், ஸ்பானியாவில் 8 மணித்தியாலங்கள், அமெரிக்கா 6 மணி 48 நிமிடங்களாகவும் உள்ளது.
தினசரி ஏழு மணி நேர உறக்கம் அடுத்த நாள் வாழ்விற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நீடித்த ஆயுளுக்கும் இது அவசியமாகிறது. சுமார் 20 வருடங்களாக செய்யப்பட்ட கலிபோர்ணியாவின் ஆய்வொன்று இதை வலியுறுத்துவதாக இந்த ஆய்வை செய்தவர்களில் ஒருவரான ஜன் ஊவர்சன் தெரிவித்தார். மனிதர்களின் உறக்கத்தில் முதல் பகுதி ஆழமான உறக்கமாகவும், அடுத்தபகுதி கனவுகள் நிறைந்ததாகவும் இருப்பதாகவம் இவ் ஆய்வு தெரிவிக்கிறது. இன்றுள்ள பரபரப்பு வாழ்வு நித்திரை குறைந்த மக்களையே மேலும் அதிகரிக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. Nirojan S
|