பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

நீங்காத நிறவெறி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 08 October 2005

11 வருடங்களின் முன்பு நிறவெறி ஒழிப்பு தென் ஆபிரிக்காவில் நடைமுறைக்கு வந்துவிட்டதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால் அண்மையில் நடந்துள்ள குரூரமான சம்பவம் அப்படியெல்லாம் தென் ஆபிரிக்கா மாறி விடவில்லையே என்று சொல்வதுபோல்தான் தெரிகின்றது. ஒருவரை அடித்து விழுத்தி கைகளைப் பிணைத்து பின்பு அவரை சிங்கத்தின் அடைப்பிற்குள் தூக்கிப் போடுவது என்பது எவ்வளவு கொடூரம்? தென் ஆபிரிக்காவில் ஒரு வெள்ளை இன விவசாயி தன் பண்ணையில் மாஜி ஊழியராக இருந்த ஒரு கறுப்பு இனத்தவரை அடித்து பின்பு சிங்கத்திற்கு இரையாகத் தூக்கிப் போட்டிருக்கின்றார்.

 இவருக்கு இன்னொரு கறுப்பின ஊழியர் இந்த அக்கிரமத்திற்கு ஒத்தாசை வழங்கி இருக்கின்றார். இப்பொழுது இந்தக் கொலைகார வெள்ளைக்கார விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவரோடு ஒத்துழைத்த கறுப்பின ஊழியருக்கு 15 வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 2003இல் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்த ஊழியர் 2004ம் ஆண்டு பண்ணையில் தான் விட்டுச்சென்ற உடைமைகளை எடுக்கச் சென்றபோதே தாக்கப்பட்டுள்ளார். இவர் சிங்கத்தின் அடைப்பிற்குள் போடப்பட்டபோது உயிரோடு இருந்தாரா என்பது இன்னமும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. அதிகாரிகள் சிங்கத்தின் அடைப்பிற்குள் எலும்புத் துண்டுகளையும் கிழிந்த சில உடைகளையுமே கண்டெடுத்து உள்ளார்கள். தென் ஆபிரிக்காவில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவது 1996இல் ஒழிக்கப்பட்டு விட்டது.



நெருடல் இணையம்
Comments (1) >>

Naathan said:

 
Ankai colour pirachanai... Naangal thamilarukku inapirachanai.. Ankai makkal colouraalai adimayaakka padukiraarkal.. Inkai naangal thamilar singala kaadayaarkalaalai odukkapadukiroam!
October 09, 2005
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..