|
Saturday, 08 October 2005 |
|
12 வயதுச் சிறுமியொருத்தி மதிய உணவுக்கு ஒரு ரூபாய் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இதைவிட என்ன கொடுமை வேண்டிக் கிடக்கின்றது? இந்தியாவின் கல்கத்தா நகரில்தான் இந்தக் கொடுமை இடம்பெற்றிருக்கின்றது. பொதுவாகவே இந்தச் சிறுமிக்கு பாடசாலையில் எதுவுமே உண்ணக் கிடைப்பதில்லை. ஒரு வெள்ளியன்று தன்னோடு படிக்கும் சிறுமிகள் சோறும் கறியும் சாப்பிட்டதைப் பார்த்தபோது இவளுக்கும் சோற்றில் ஆசை வர வீட்டுக்கு ஓடிவந்து தாயிடம் ஒரு ரூபாய் தரும்படி கெஞ்சியிருக்கின்றாள். ஆனால் அந்தத் தாய்க்கோ அதற்கு வழியில்லை.
பொதுவாக தான் வேலை செய்யும் வீடுகளில் மிச்சமாகக் கிடைக்கும் உணவைக் கொண்டுவந்துதான் மகளுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. இவளுக்கு ஆண் பிள்ளைகளும் உண்டு. தனக்கு மாத வருமானமாக 13 இந்திய ரூபாய்களுக்கு மேல் கிடைப்பதில்லையாம். தன் மகள் சோறும் கறியும் கேட்க சீறிப் பாய்ந்து விட்டு தாய் வேலைக்குப் போய்விட்டாள். வீடு திரும்பியபோது சேலையால் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டு தொங்கும் மகளின் உடலைத்தான் காணமுடிந்துள்ளது. இங்கு நமக்கு மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிட முடிகின்றது. கொடுக்கும் சாப்பாட்டை உண்பதிலும் அலட்சியம். காட்டுகிறோம். வறுமையின் கொடுமையை நமது பிள்ளைகளும் அறிவார்களா?
நெருடல் இணையம்
|