|
Saturday, 08 October 2005 |
|
43 வயதுப் பெண் ஒருவர் 25 வருடங்களுக்கு மேற்பட்ட காலச் சிறைவாசத்திற்குப் பின்பு மீட்கப்பட்டுள்ளார். இதிலென்ன புதினம் இருக்கின்றது என்று கேட்கிறீர்களா? தனது வீட்டுக்குள்ளேயே இவர் இவ்வளவு காலமும் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதுதான் செய்தி. இந்தியாவின் ஒரிஸ்ஸா மாவட்டத்தில்தான் இந்த அநியாயம் அரங்கேறி இருக்கின்றது. மூளைப் பிசகோடு இருந்த இவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார் என்பதற்காகவே தனி அறையில் அடைத்து வைத்தோம் என்கிறார்கள் வீட்டுக்காரர்கள். நாங்கள் அவளைத் துன்புறுத்தவில்லை.
ஒழுங்காக உணவும் குடிக்க நீரும் கொடுத்து வந்தோம் என்கிறார்கள இவர்கள். ஆனால் நேரில் இந்தப் பெண்ணைக் கண்டவர்கள் பெண்ணைப் பார்த்தபோது அப்படி நடாத்தப்ட்டதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ அவள் நிர்வாணமாக இருந்தாள் என்று கூறியிருக்கின்றார்கள். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட இவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள். யாருக்கு மூளைப் பிழை என்பது சில நாட்களில் தெரியத்தானே போகின்றது. நெருடல் இணையம்
|