பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தெற்காசியாவில் பெரும் பூகம்பம்- 1200 பேர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 09 October 2005

வடக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஒரு பரவலான நிலப்பகுதியில் கடும் பூகம்பம் தாக்கியுள்ளது. ரிக்டர் மானியில் 7.6 புள்ளிகள் அளவிருந்த இந்த நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் ஆயிரத்து இருநூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ஒரு இயற்கை பேரழிவு சம்பவத்தை எதிர்கொண்டுள்ளது என பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷௌகத் சுல்தான் தெரிவித்தார். பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் இந்த பூகம்பத்தின் மையம் அமைந்திருந்தது.

அப்பகுதியின் முக்கிய நகரமான முஸாஃபராபாத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பாகிஸ்தான் வடபகுதியில் கிராமங்கள் முற்றும்முழுதாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் பல சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்றதாகியிருப்பதாகவும், தொலைபேசி இணைப்புகள் செயலிழந்து காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசத்தின் உறுதியை சோதித்துப் பார்க்கும் விஷயம் இந்த பூகம்பம் என்று பாகிஸ்தான் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார்.

இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரில் 220 பேர் பலி

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் குறைந்தது 220 பேர் பலியாகியுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். சர்ச்சைக்குரிய இந்தப் பிராந்தியத்தை பிரிக்கும் கட்டுப்பாட்டுக்கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளிலேயே அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் பல சிறிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. இடிந்து வீழ்ந்த கட்டிடங்களில் இருந்து வெளியே தப்பியோடிய போது நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மண்சரிவுகளும் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தப் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய இராணுவத்தினரும் இந்த மண் சரிவுகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

இரவு வேளையில் மிகவும் உறைந்து போகக்கூடிய அளவுக்கு வெப்பநிலை குறையக் கூடிய சாத்தியம் இருப்பதால், பூகம்பத்தால் வீடுகளை இழந்த காஷ்மீரிகளுக்கு இந்திய அரசினால் கூடாரங்கள் விமானமூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பூகம்ப உதவிகள் வரத்தொடங்கின

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு அவசர உதவிகளையும் நிதியையும் வழங்க முன்வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக பணத்தை வழங்கக் கூடியதாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்தில் சேவையில் இருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் எம்.எஸ்.எப் ஆகிய இரண்டு நிறுவனங்களுடனும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில் இருப்பதாக ஒன்றியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறினார்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கான நிபுணர்களின் உதவியுடன் நிதியுதவியும் தேவை என்று பாகிஸ்தானின் பிரதமர் சௌகத் அஸீஸ் கூறியுள்ளார். மருத்துவ மற்றும் மீட்புப் பணியில் நிபுணத்துவம் பெற்ற 60 பேர் கொண்ட குழு ஒன்றை பிரிட்டன் அனுப்புகிறது. ஜேர்மனி, துருக்கி மற்றும் கிறீஸ் ஆகிய நாடுகளும் உடனடி உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

மருத்துவ மற்றும் மீட்ட்புப் பணி அதிகாரிகள் அடங்கிய குழுக்களை பாகிஸ்தான் வடக்கு நோக்கி ஹெலிக்கொப்டரில் அனுப்பியுள்ளது. உள்ளூர் மருத்துவ மனைகள் அவசர சேவைக்கான ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிராமப் புறங்களில் மருத்துவ முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


bbc
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..