|
இமயமலை அடிவாரத்தில் அடுத்த பூகம்பம் |
|
|
|
Sunday, 09 October 2005 |
|
விஞ்ஞானிகள் எச்சரிக்கை பாகிஸ்தான் இந்தியா ஆகிய நாடுகளை இன்று தாக்கிய பூகம்பம் வழக்கமாக பூகம்பம் ஏற்படக்கூடிய சாத்தியகூறுள்ள ஒரு பகுதியில் நடந்திருக்கிறது; இது விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கபட்ட ஒரு நில நடுக்கம்தான் என சென்னை பல்கலைக்கழக நிலவியல் துறை பேராசிரியர் ராஜேஷ்வரராவ் கூறினார்.
செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியோ அல்லது அக்டோபர் மாதம் 3ஆம் தேதியோ இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று நிலவியலாளர்கள் எதிர்பார்த்திருந்தனர் என்றும் அது சற்று மாறி இன்று வந்துள்ளது என்றும் ராஜேஷ்வரராவ் தெரிவித்தார். இன்று பூகம்வந்த இடத்திற்கு சற்று தள்ளி இமாச்சல பிரதேசம் பகுதியில் மீண்டும் பூகம்பம் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார். அதாவது இந்தியாவில் இமயமலை அடிவாரப் பகுதியிலுள்ள காங்கிரா என்ற இடத்தில் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலநடுக்கம் தோன்றியது, அதன் பிறகு இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கவில்லை, இந்த இடத்தில் பூவி மேற்பரப்புத் தகடுகள் உருவாக்கிவரும் அழுத்தமானது கடந்த நூறு ஆண்டுகளாக சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டே வருவதால், இந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என உலக அளவில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக ராஜேஷ்வரராவ் தெரிவித்தார். bbc
|