|
ஆள்சேர்ப்புக்கு அல் கெய்டா இணைய தளத்தில் விளம்பரம்! |
|
|
|
Tuesday, 11 October 2005 |
|
சர்வதேச தீவிரவாத அமைப்பான அல் கெய்டா தமது இயக்கத்துக்கு ஆள்களைச் சேர்ப்பதற்காக இணையத்தளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இணையத்தள சேவையை கடந்த சில ஆண்டுகளாக அல் கெய்டா உள்ளிட்ட முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் பலவும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தங்கள் அமைப்பை மேலும் பலப்படுத்துவதற்காக முஸ்லிம் இளைஞர் களை நோக்கி அல் கெய்டாவுடன் தொடர் புடைய "குளோபல் இஸ்லாமிக் மீடியா' என்ற இணையத்தளம் வலைவீசியுள்ளது. இந்த இணையத்தளத்தில் அல் கெய்டா அமைப்புக்கு ஆள்கள் தேவை எனத் தெரி விக்கப்பட்டுள்ளதுடன் வீடியோ தயாரிப்பு, படத்தொகுப்புச் செய்தல் உட்பட்ட பணிக ளுக்கும் ஆள்கள் தேவை எனக் கோரப்பட் டுள்ளது. எனினும், சேரவிரும்புபவர்கள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது பற்றிய தகவல் களோ சம்பள விவரங்களோ அதில் வெளி யிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. nisam
|