|
மன்னாரில் படைக்காவி தகர்ப்பு! 9 படையினர் பலி! மேலும் பலர் படுகாயம் |
|
|
|
Tuesday, 06 May 2008 |
|
மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இருந்து வட்டக்கண்டல் நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் உக்கிரமான வழி மறிப்பு தாக்குதலில் ஈடுபட்டு படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு பலத்த கனரக சூட்டாதரவுடன் முன்னேறிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தினர்.
இதனையடுத்து சிறீலங்காப் படையினர் டாங்கிகள் மற்றும் படைக்காவிகளையும் களமிறக்க முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். இதன் போது ஒரு படைக்காவி புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி தகர்ந்துள்ளது. இதில் பயணித்த 9 படையினர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மேலும் பல படையினர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை நேற்றுக் செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணிக்கு திருக்கேதீஸ்வரத்தில் இருந்தும் படையினர் இன்னொரு நகர்வை மேற்கொண்டனர்.
பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறிகள் எறிகணைகள் கனரக ஆயுதங்கள் சகிதம் படையினர் இந்த முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டள்ளது. படையினரின் முன்னேற்ற முயற்சியைக்கு எதிராக போராளிகள் பலத்த எதிர் தாக்குதலைத் தொடுத்து படையினரை பழைய நிலைகளுக்க விரட்சியடித்துள்ளனா.
இதில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் எற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|