பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறிலங்காவின் நாடாளுமன்றம் மகிந்தவினால் ஒத்திவைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 07 May 2008

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தினை அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஜூன் மாதம் 5 ஆம் நாள் வரை நாடாளுமன்றத்தினை ஒத்திவைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அறிவித்திருக்கின்றது.

அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்தின் முதலாவது பிரிவின் பிரகாரம் அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளது.

இந்த அதிகாரச் சட்டத்தின் படி அடுத்த கூட்டத்தொடருக்கான காலத்தினை அரசாங்கம் தீர்மானிக்க அதிகாரம் உள்ள போதும், அது இரு மாதங்களுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும்.

நாடாளுமன்றத்தினை ஒத்திவைப்பதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு  வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைகள், நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் என்பனவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போதே அவற்றினைச் சமர்ப்பிக்க முடியும்.

அரசாங்கத்தின் இந்த முடிவினை ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன கடுமையாக எதிர்த்துள்ளன.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மேற்கொள்ளவுள்ள வன்முறைகளை மறைக்கும் நோக்குடனே அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் திச அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது ஒரு ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதனை இதன் மூலம் அரசாங்கம் தடுத்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (10.05.08) கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தவறான முறையில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே பல திட்டங்களை வகுத்துள்ளது என்றார்.

இதனிடையே கிழக்கில் நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் ஜனநாயகமற்ற முறையில் பல செயற்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அதற்கு அமைவாகவே நாடாளுமன்றத்தினை அது ஒத்திவைத்துள்ளது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது ஒரு சந்தேகத்திற்கு இடமான நகர்வு, தேர்தலுக்கு நான்கு நாட்கள் இருக்கையில் அரசாங்கம் இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது. இந்த நகர்வுகள் நாம் மிகப்பெரும் வெற்றியீட்டுவோம் என்பதனையே என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக பொதுமக்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவிப்பதனை அரசாங்கம் தடுக்க முடியாது என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..