|
அச்சத்தால் உண்மையை கூறமுடியவில்லை! ஜனாதிபதி ஆணைகுழு முன் அழுதுள்ளாராம் கிறிஸ்தவ மதகுரு |
|
|
|
Tuesday, 06 May 2008 |
|
அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை விசாரணையில் சாட்சியமளிக்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதால், தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக, நேற்று முன் தினம் திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு, ஜனாதிபதி ஆணைகுழு முன் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஓகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைகுழுவினரால் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
நெருடல் இணையம்
|