|
தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கத்துடன் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடவேண்டும் -- பகவதி |
|
|
|
Thursday, 08 May 2008 |
|
தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் தலையிடலாம் என இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் என் கே பகவதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த முனைப்புகள் தமிழ்நாட்டின் எண்ணங்களுடன் இணைந்து செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
இலங்கையின் டெய்லி மிரர் ஆங்கில செய்திதாளுக்கு தொலைபேசி மூலம் அவர் செவ்வியளித்துள்ளார்.தமிழிழ விடுதலைப்புலிகளின் இணக்கம் இல்லாமல் இந்தியா இலங்கை விடயத்தில் தலையிட்டால் அது இந்தியாவுக்கு பாரிய பாதகங்களை ஏற்படுத்தும். தமிழிழ விடுதலைப்புலிகளும் தமிழர்கள் அத்துடன் தமிழகத்தில் உள்ளவர்களும் தமிழர்கள் என்’பதன் காரணமாகவே இதனை தாம் குறிப்பிடுவதாக பகவதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் உள்ள இனங்கள் மத்தியில் உள்ள உணர்வுகளே அங்குள்ள பிரச்சினைகளுக்கான காரணமாகும். ஒரு இனம் அடுத்த இனத்திற்கு மதிப்பளிக்கும்போதே பிரச்சினையை அங்கு தீர்க்கலாம் என்பது பகவதியின் கருத்தாகும்.
இதேவேளை பகவதியின் கருத்துக்கள் தொடர்பாக இலங்கை சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்கவின் கருத்தை கேட்டபோது இலங்கையின் விடயத்தில் இந்தியாவை தலையிடுமாறு அழைப்புகள் விடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டார். நோர்வேஜியர்கள் இலங்கைக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்த அவர் நோர்வேக்காரர்கள் சமாதானத்தை அடைவதற்கான முனைப்புகள் குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தவேண்டும் என குறிப்பிட்டார். அவர்கள் கிளிநொச்சிக்கு செல்லவேண்டுமாயின் அங்கு சென்று சமாதானத்திற்காக அவர்கள் செய்யப்போகிறார்கள் என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் என்றும் ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டார்
நெருடல் இணையம்
|