பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுனியாவில் 2 பொதுமக்கள் சுட்டுப் படுகொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 07 May 2008

வவுனியாவில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவினால் பொதுமக்கள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா செக்கடிப்பிலவு என்ற இடத்தில் இன்று வியாழக்கிழமை காலை சின்னத்தம்பி பாஸ்கரன் (வயது 63) என்ற வர்த்தகர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

முச்சக்கர வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலர் இப்படுகொலையைச் செய்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் நீதிபதி எம்.இளஞ்செழியனிடம் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்திய நீதிபதி, சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். 

மேலும் துணைப்படைக் குழுவினால் சிறி என்பவரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே வவுனியாவில் நேற்று முன்நாள் புளொட் உறுப்பினர் பவான் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

புளொட் பவான் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் துணைப்படைக் குழுவான ஈ.பி.டி.பி.யினரும் சிறிலங்காப் படையினரும் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. 

பவானை சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்கள் சென்ற முச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளான போது அதில் இருந்த ஈ.பி.டி.பி. துணைப்படைக்குழுவினரை பூந்தோட்டம் பகுதி  மக்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..