|
4 மாத காலப்பகுதியில் 385 படையினர் பலி- 2,965 படையினர் காயம்: சிறிலங்கா அரச தகவல்கள் |
|
|
|
Wednesday, 07 May 2008 |
|
சிறிலங்கா அரச தரப்பு அறிவிப்புக்களின் பிரகாரம் கடந்த 4 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 385 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,965 படையினர் காயமடைந்துள்ளனர்.
அந்த வகையில் இந்த 4 மாத காலப்பகுதியில் மொத்தம் 3,350 படையினரை களமுனை இழந்துள்ளது.
எனினும் சிறிலங்கா அரச படையினருக்கு ஏற்பட்ட பெருமளவிலான இழப்புக்களை மறைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வட போரரங்கில் கடந்த மாதம் 23 ஆம் நாள் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
கொழும்பில் உள்ள மலர்ச்சாலைகளுக்கு 176 படையினரின் சடலங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.
இருப்பினும் கடந்த மாதம் 121 படையினர் மட்டுமே உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|