பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 09 May 2008

சந்தைகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கான கோட்டா முறை நவம்பர் மாதத்திற்குள் காலாவதியாகவுள்ள நிலையில் சர்வதேச ஒப்பந்தங்கள் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகள் மூலமாக பாதுகாக்கப்படல் வேண்டும்.

அவ்வாறு சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படாவிடின் வருட இறுதிக்குள் இலங்கைக்கான சர்வதேச பொருளாதார உதவிகள் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பு அதிகாரத்தின் மூலமாக உயர்நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்கின்றதா என்பது தொடர்பாக ஆராயப்படல்வேண்டும் இது தொடர்பில் நான் விரைவில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் ஆடை ஏற்றுமதிக்காக கிடைக்கப்பெற்ற கோட்டா முறையை பாதுகாப்பதற்காக சகலரும் கைகோர்க்கவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய லக்வனிதா அமைப்பின் கொழும்பு மாவட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; ஏற்றுமதி பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சிகண்டுகொண்டிருக்கின்ற நிலையில் இவ்வருட இறுதிக்குள் பொருளாதாரம், ஆதாயம்,தொழில் பாதுகாப்பு போன்ற பல்வேறு சவால்களுக்கு பெண்கள் முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். 200 ஆடை தொழிற்சாலைகள்

1977 ஆம் ஆண்டு தேயிலை,இறப்பர் உள்ளிட்ட இதர கைதொழில் துறைகளிலிருந்து புதிய ஏற்றுமதி துறையான ஆடைத்தொழிற் துறை ஆரம்பிக்கப்பட்டது. விசேடமாக 200 ஆடைத்தொழிற்சாலைகள் கிராமபுறங்களில் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலமாக இதர உள்ளுர் உற்பத்திகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன.

ஒழுங்கான முறையில் ஆடைகளை அணியமுடியாமல் இருந்த இலங்கையர்கள் உலகத்திற்கே ஆடைகளை ஏற்றுமதிசெய்தனர்.கோட்டா முறை ஒப்பந்தத்தின் மூலமாக ஐரோப்பிய,ஜப்பான் ஆகிய சர்வதேச சந்தைகளுக்குள் இலங்கைக்கு இலகுவாக நுழைவதற்கு முடிந்தது. அதுமட்டுமல்லாது ஆடைத்தொழிற்துறையை சார்ந்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்தன. ஆடைத்தொழிற்துறையில் உள்ளூர் முதலீட்டார்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நிரந்தர வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டதுடன் 12 இலட்சம் பேருக்கு பகுதிநேர தொழிலாளர்காக இணைந்துகொண்டனர். இந்தியா,சீனா,பங்களாதேஷ் இடம்பிடித்தன

கோட்டா முறை 2002 ஆம் ஆண்டுடன் காலவதியானபோது அது இலங்கைக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது இச்சந்தர்ப்பத்திலேயே இந்தியா,சீனா,பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சர்வதேச சந்தைகளில் இடம்பிடித்துக்கொண்டன. எனினும் 2002 ஆம் ஆண்டு சமாதான முன்னெடுப்புகளை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவிடமிருந்து முன்னுரிமை அடிப்படையிலான சலுகையை பெற்றுக்கொடுத்தேன் (கு.னு.று) தீர்வை கிடைத்தது இதன் மூலமாக ஆடைத்தொழிற்துறையில் உள்ளூர் உற்பத்தி வீதம் அதிகரித்தது.

7200 வகையான பொருட்களுக்கு வாய்ப்பு சமாதான முன்னெடுப்புகளை மேற்கொண்டதன் மூலமாகவே ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படாமலும், வேலையற்றோர் தொகை அதிகரிக்காமலும் காப்பாற்ற முடிந்தது. இதேவேளை அக்காலப்பகுதியில் சலுகையை பெற்றுக்கொடுத்தேன் (கு.னு.று+)) மறுசீரமைக்கப்பட்டமையினால் 7200 வகையான பொருட்களை தீர்வையுடன் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதிசெய்வதற்கு இலங்கைக்கு வாய்ப்புகிடைத்தது.

நல்லாட்சி மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையினால் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்கின்ற பொருட்களுக்கான சலுகை அதிகரித்திருந்தது. சர்வதேச ஒப்பந்தங்களில் ஜனாதிபதியொருவர் கைச்சாத்திட்டால் அவ்வொப்பந்தங்களை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்படும் தேவையேற்படி சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும். சர்வதேச தொழிலாளர் சட்டம்

சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போது வேலைவாய்ப்பற்றோர் தொகை அதிகரித்து செல்லுமாயின் பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். சர்வதேச தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வேலைநிறுத்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது.

முன்னுரிமை அடிப்படையிலான சலுகை வழங்கப்படாத சில நாடுகள் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு இருக்கின்றன. அமெரிக்கா,சீனா போன்ற நாடுகள் இவ்வாறான பிச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளன.

உயர்நீதிமன்ற ஆலோசனைகள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தில் இலங்கை 1980 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. அந்த சட்டம் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகளின் பிரகாரம் முன்னெடுக்கப்படவேண்டும். அரசியலமைப்பின் 129 ஆம் பிரிவில் குறிப்பிட்டது போல ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரத்தின் கீழ் ஆலோசைனை பெற்றுக்கொள்ளப்பட்டன.

1448.4 மில்லியன் அமெ.டொலர் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி கோட்டா ஒப்பந்தம் இவ்வருடம் நவம்பர் மாதத்துடன் காலவதியாகின்றது கோட்டா முறையை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச சந்தைகளில் அது பங்களாதேஷ்,வியட்நாம் ஆகிய நாடுகளுக்கே வாய்ப்பாக அமையும். சர்வதேச சந்தைக்கு 2007 ஆம் ஆண்டு 3203.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட இதில் 1448.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடைகள் ஐரோப்பிய சந்தைக்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜயவர்தன, சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆகியோர் காலத்திலிருந்து செய்துக்கொள்ளப்பட்டு வருகின்ற சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படவேண்டும் அரசியலமைப்பு அதிகாரத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்கின்றதா? என்பது குறித்து கலந்துரையாடப்படவேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு தொழிற்துறையை பாதுகாக்கவேண்டும்.

கோட்டாவை பாதுகாக்க ஐக்கியப்படல் வேண்டும் கோட்டா முறையை பாதுகாப்பதற்காக சகலரும் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும் அதற்காக கிழக்கு மாகாண தேர்தலுக்கு பின்னர் பிரஸ்ஸில்ஸ்க்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றேன் எனினும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கேள்விகளுக்கு அரசாங்கமே பதிலளிக்கவேண்டும்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..