|
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவினர் நடத்திய விருந்துபசாரம்…. |
|
|
|
Friday, 09 May 2008 |
|
மட்டக்களப்பில் நாளை உள்ளுரட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர். அதைவிட பிள்ளையான் குழு உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்து சிவிலுடையில் நடமாடுவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
மேலும் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்களங்கள், அலுவலக ஊழியர்களுக்கும் மதியபோசன விருந்துபசாரம் ஒன்றை பிள்ளையான் குழுவினர் நடத்தியதாகத் தெரிய வருகிறது.
பிள்ளையான் குழுவின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளரான சீலன் என்பவர் மட்டக்களப்பு- தாண்டவன் வெளியிலுள்ள பிரபல உணவகமான சிவா உணவகத்துக்கு தனது சகாக்களுடன் சென்று பலவந்தமாக உணவுப் பார்சல்களை கொண்டுசென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று இரவு உணவக்காக பிள்ளையான் குழுவினரின் சில முக்கிய உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பிலுள்ள பிரபலமான பேக்கரியான சண்சைன் பேக்கரியிலிருந்து சீலனின் வற்புறுத்தலுக்கமைய சண்சைன் பேக்கரி நடத்துனரான நந்தன் என்பவரால் பிள்ளையான் குழுவினரின் கோவிந்தன் வீதியிலுள்ள மீனகம் அலுவலகத்துக்கு சுமார் 200 உணவுப் பார்சல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளநிலையில் பெருமளவான பிள்ளையான் குழு உறுப்பினர்களும் விசேட அதிரடிப்படையினரும் வீதிகளில் நடமாடித் திரிவதை காணக்கூடியதாக இருக்கிறது.
மீனகன்
|