பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையான் குழுவினருடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இணைவு!! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 10 May 2008

  மட்டக்களப்பு ஹோட்டலில் விடிய விடிய நடந்த பார்ட்டி!

மட்டக்களப்ப மாவட்ட மாகணசபைத் தேர்தலில் புதிய திருப்பம் ஒன்று நேற்று முதல் ஏற்பட்டுள்ளது.

இது பற்றித் மேலும் தெரிய வருவதாவது.

மட்டக்களப்ப மாவட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள கட்சிகளும். பிள்ளையான் குழுவினரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இவர்களக்க எதிராக ஐக்கியதேச்யக் கட்சியின் உறுப்பினருப் போட்டியிடுகிறார்கள். எனவே பெரும்பான்மையான தமிழ் மக்களின் வோட்டுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கே போடப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் நேற்று முதல் இந்நிலமை மாறியுள்ளது.

நேற்று இரவு மட்டக்களப்ப லேக் வியூ ஹோட்டலில் பிள்ளையான் குழுவினர் உட்பட அரசாங்கத்திற்குச் சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் விருந்துபசாரத்துடன், மதுபான வகைகளும் பறிமாறப்பட்டுள்ளன. இந்த பார்ட்டியில் மட்டக்களப்ப மாவட்ட ஐக்கிய தெசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரான சசிதரன் என்பவரும், அவருடன் இணைந்து போட்டியிடும் ஜெகன் என்பரும் கலந்து கொண்டுள்ளதாக உறதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்pன்றன.

இதேவேளை கடந்த சில காலமாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரான சசிதரனுக்கு பிள்ளையான் குழுவினரால் அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும் தற்பொழுது இவர்கள் இருவருக்குமிடையில் இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டபின்னர் அவர்கள் இணைந்தே போட்டியிடுவதாகவும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

மேலும் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறியுள்ளதுடன். ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான தமிழ் மக்களின் வோட்டுக்களை பிள்ளையான் குழுவினருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கு சசிதரன் வாக்குறுதியளித்துள்ளதாகவும் பிள்ளையான் குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் இருபதுக்கும்; மேற்பட்ட வாகனங்கள் ஹோட்டலின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்.

வெள்ளை நிற பிராடோ ரகத்தைச் சேர்ந்த ஜே.டீ 3694 இலக்கமுடைய பிள்ளையானின் வாகனத்தில் சில இளம்பெண்களும் வந்திறங்கியதாக தகவல் தெரிவிக்கின்றது.

அத்துடன் மூன்று நாட்களுக்கு இந்த ஹோட்டலின் அறைகள் அனைத்தும் பிள்ளையான் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 12 அறைகளில் 7அறைகளில் பிள்ளையான் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் முக்கியஸ்தர்களுக்கும், 5அறைகள் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கியதேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு லேக் வியூ ஹோட்டலின் நடத்துனரான பாபுவே இந்த பார்ட்டியை முன்னின்று நடத்தியுள்ளார். இவர்பற்றிய செய்தி ஒன்று அண்மையில் நமது இணையத்தளத்தில் வெளிவந்தது தெரிந்ததே!

இவற்றைவிட மட்டக்களப்பிலுள்ள பிரபலமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் மாவட்ட முகாமையாளர் ஒருவரும் இந்தப் பார்ட்டியில் கலந்த கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரே தனது அலுவலகத்தில் வேலைசெய்யும் மேற்படி இளம்பெண்களை அழைத்து வந்திருக்கலாமென அங்கிருந்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கி;ன்றன.

 


மீனகன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..