|
வாக்குச்சீட்டுக்களை தனக்கு போடுமாறு கேட்கும் பிள்ளையான். |
|
|
|
Friday, 09 May 2008 |
|
கிழக்குமாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் வாழைச்சேனைப் பகுதிக்குச் சென்று விபுலாந்தா வித்தியாலயத்தில் தனக்கு வாக்குச்சீட்டுக்களைப் போடுமாறு போடுமாறு வேண்டுகை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் இன்று இடம்பெறும் தேர்தல்களின் போது வாழச்சேனை பகுதியில் 30 லொறிகளில் பிள்ளையான் குழுவினர் மதுபானப் போத்தல்களை இறக்கி தமக்கு வாக்களிக்குமாறு கூறி மதுப்போத்தல்களை மக்களுக்கு இன்று வழங்கிவருகின்றனர். இதேவேளை மட்டக்களப்பு நகரப்பகுதியில் இன்று பிள்ளையான்குழுவினர் முஸ்லீம் இளைஞர்கள் இருவரை தாக்கியுள்ளனர். மட்டக்களப்பு பகுதியைச்சேர்ந்த க.தஸ்ரின் வயது 27 நவாஸ் வயது 32 ஆகிய இருவருமே பிள்ளையான் குழுவினரால் தாக்கப்பட்டவர்களாவர் இவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு காவல்பணிமனையில் இன்று முறையிடப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|