பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow போர் தொடங்குமானால் அரசே முழுக் காரணம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

போர் தொடங்குமானால் அரசே முழுக் காரணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 October 2005

மீண்டும் ஒரு போர் தொடங்குமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் சிறிலங்கா அரசாங்கமே ஏற்ற வேண்டும். ஏனெனில் சமாதான சூழலை சீர்குலைத்தவர்கள் அவர்கள். இன்றும் சீர்குலைத்து கொண்டு இருக்கின்றனர்.

போரினைத் தூண்டுதல், தொடங்குதல் உட்பட பல்;வேறு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று தமிழர் தரப்பு நிழல் யுத்தம் ஒன்றிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அது போராக வெடிக்குமானால் அதற்கான முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இரு பிரதான கட்சி வேட்பாளர்களும் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரத்தை முடக்கி விட்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைதான் அவர்களது பிரசாரப் பொருளாக பந்தாடப்படுகின்றது. ஆயினும், இரு தரப்பும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறைகள் குறித்துத் தெளிவான நல்லெண்ணச் சூழலை வெளிப்படுத்தவில்லை.

கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் எவ்வாறு சிங்கள அரசியல் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டார்கள், இனி வரும் தலைமைத்துவங்கள் ஏமாற்றாது விடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

பண்டாரநாயக்கா டட்லி, சிறிமாவோ, ஜே.ஆர், பிரேமதாசா, விஜயதுங்கா, சந்திரிகா, ரணில் இவர்களது ஆட்சிக் காலங்களில் தமிழ் மக்களுக் குக்கிடைத்த வரப்பிரசாதங்கள் எவையுமில்லை.

நாடு துண்டாடப்படக் கூடாது. அந்த அடிப்படையில்தான் தீர்வு காணப்படும் எனக் கூறுகின்றார்கள். ஆனால் இலங்கைத் தீவின் இருநாடுகள் எப்போதோ உருவாகிவிட்டன. கொழும்பைத் தலைநகராக் கொண்ட சிறிலங்கா அரசும் கிளிநொச்சியை தலைநகராகக் கொண்டு தமிழீழத் தாயகமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அவர்கள் எவ்வாறான படைக் கட்டமைப்புக்களை வைத்திருக்கின்றார்களோ, அதே படைக் கட்டமைப்புக்களைத் தமிழர் தாயகமும், வைத்திருக்கின்றது.

தமிழர்களின் பலத்தை சிங்களப் பேரினவாத சக்திகள் நினைப்பது போன்று ஆயுதப் படைகள் மூலம் பலவீனப்படுத்திவிடலாம் எனக் கருதுகின்றனர். இது ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை. மாறாக பல ஆயிரக்கணக்கான பிரேதப் பெட்டிகளே தென்னிலங்கையில் விமானங்கள் மூலம் கொண்டு இறக்கப்படும் சூழல் ஏற்படும்.

எனவே தென்னிலங்கை சமூகத்தின் சமாதானத்திற்கான நல்லெண்ணச் சூழலைச் சீர் குலைத்து இனவாதத்தைத் தூண்டுவதற்கும், அதற்கான ஆதரவை திரட்டுவதற்குமான நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இதனை வெற்றியடைச் செய்வதற்கான பிரசாரங்கள் முடக்கி விடப்பட்டுள்ளன. இந்த சிறிலங்காவின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தலில்வெற்றி பெறும் வேட்பாளர் நல்லெண்ணத்துடன் சமாதானத்திற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

தமிழினத்தையும், இந்த சிறிலங்காவின் சமத்துவமான இனமாக அங்கீகரிக்க வேண்டும், மாறாக ஒற்றையாட்சி என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடி வரலாற்று துரோகமிழைக்க முனையக் கூடாது. அது பாரிய அழிவுகளையே ஏற்படுத்தும்.

தற்போது சமாதான சூழலை சீர் குலைத்துக் கொண்டு வரும் சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தின் ஆதரவை ஒட்டுமொத்தமாக பெற்றுக் கொள்ளும் வகையிலும், சர்வதேச ரீதியாக உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் ஒரு நடவடிக்கையாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உத்தரவை கருத வேண்டியுள்ளது.

எனினும் விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் தடை தற்காலிகத் தடை என்பதை மறந்து விட்டார்கள்.

எனவே எந்த வழிமுறையிலாவது மீண்டும் போர் தொடங்கப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் சிறிலங்கா அரசாங்கமே ஏற்க வேண்டும். தமிழர் தரப்பு போரை தொடங்குவதற்குகான காரணிகளாக ஒரு போதும் இருக்க மாட்டார்கள்.


eelanatham
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..