|
செஞ்சிலுவைச் சங்கத்திடம் படையினரின் 5 உடலங்கள் கையளிப்பு |
|
|
|
Friday, 09 May 2008 |
|
மன்னாரில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்த போது கைப்பற்றப்பட்ட படையினரின் 5 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய மோதலில் படையினரின் 7 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட 5 உடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் இன்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டன.
இவை படையினரின் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்காக வவுனியாவுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினரால் கொண்டு செல்லப்பட்டன.
நெருடல் இணையம்
|