பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 11 May 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியிருக்கின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றது.

வடக்கிலிருந்து பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான மாகாண சபைத் தேர்தலை சிறிலங்கா அரசாங்கம் நேற்று சனிக்கிழமை நடத்தியது.

இத்தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் வரலாற்றில் மோசடி மிகுந்த தேர்தல் இது என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகின.

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளே முதலில் வெளியிடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 341 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைச் சுவீகரித்துக்கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சி 58 ஆயிரத்து 602 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி 7 ஆயிரத்து 714 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு என மூன்று தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இம் மூன்று தொகுதிகளிலும் 3 லட்சத்து 30 ஆயிரத்து 950 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 443 வாக்காளர்களே வாக்களித்தனர்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் 21 ஆயிரத்து 88 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 355 வாக்குகளே செல்லுபடியான வாக்குகள் என சிறிலங்கா தேர்தல் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டத்தில் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 247 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைச் சுவீகரித்துக்கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 272 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 4 ஆயிரத்து 745 வாக்குகளைப் பெற்றபோதும் அக்கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை. 

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை என நான்கு தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நான்கு தொகுதிகளிலும் 4 லட்சத்து 9 ஆயிரத்து 308 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 389 வாக்காளர்களே வாக்களித்தனர்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 ஆயிரத்து 997 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 2 லட்சத்து 72 ஆயிரத்து 392  வாக்குகளே செல்லுபடியான வாக்குகள் என சிறிலங்கா தேர்தல் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 70 ஆயிரத்து 858 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. 

ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59 ஆயிரத்து 298 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைச் பெற்றுக்கொண்டது.

மக்கள் விடுதலை முன்னணி 4 ஆயிரத்து 266 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, மூதூர், சேருவில என மூன்று தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இம் மூன்று தொகுதிகளிலும் 2 லட்சத்து 42 ஆயிரத்து 463 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 624 வாக்காளர்களே வாக்களித்தனர்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் 12 ஆயிரத்து 695 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 929  வாக்குகளே செல்லுபடியான வாக்குகள் என சிறிலங்கா தேர்தல் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாகாண மட்ட முடிவு

மூன்று மாவட்டங்களினதும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 லட்சத்து 8 ஆயிரத்து 886 வாக்குகளைப் பெற்று 2 மேலதிக ஆசனங்கள் உட்பட 20 ஆசனங்களையும்,

ஐக்கிய தேசியக் கட்சி 2 லட்சத்து 50 ஆயிரத்து 732 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களையும்,

மக்கள் விடுதலை முன்னணி 9 ஆயிரத்து 390 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும்,

தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி 7 ஆயிரத்து 714 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும்

பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் ஆளும் தரப்பில் இருந்தே கிழக்கின் முதலமைச்சராக ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

ஆளும் தரப்பில் உள்ள இராணுவ துணைப்படைக்குழுத் தலைவர் பிள்ளையான், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையே முதலமைச்சருக்கான கடும் போட்டி காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் பிள்ளையானே அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

பிள்ளையான் போட்டியிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 ஆயிரத்து 718 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் மொகமட் 34 ஆயிரத்து 782 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மூன்றாவது இடத்தையே ஹிஸ்புல்லா பெற்றுள்ளார். ஹிஸ்புல்லாவிற்கு 34 ஆயிரத்து 581 வாக்குகள் கிடைத்துள்ளன.   

அதேவேளை, தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்ளாது அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இது ஒரு மோசடியான தேர்தல் என்றும் தேர்தல் முடிவுகளை தமது கட்சி ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளது.

3 லட்சம் பேர் புறக்கணிப்பு

இம் மூன்று மாவட்டங்களிலும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 265 பேர் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 507 வாக்களார்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 919 பேர் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 91 ஆயிரத்து 839 பேர் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..