|
கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் அரசாங்கம் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை விரைவில் வெளிப்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கம் தோல்விக்காணப்போகிறது என்பது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்கூட்டிய ஆய்வு தெரிவித்திருந்தது. இதனையடுத்தே அம்பாறையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது பல மோசடிகளும் மேற்கொள்ளப்பட்டன.
திருகோணலையில் வாக்களிப்பு தினத்தன்று அரசாங்கம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து பாரிய வாக்கு மோசடிகளில் ஈடுபட்டது. அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சில அமைச்சர்கள் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் அரசாங்கமும் பிள்ளையான் அணியும் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் வெற்றிப்பெற்றது என நிரூபிக்கப்போகிறோம் என ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகளை எதிர்த்து சட்டநடவடிக்கைகளுக்கு யோசித்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் அணிய்pன் 14 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டது. எனினும் அதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
திருக்கோவில் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று போன்ற இடங்களில் சுமார் 91 வாக்குசாவடிகளில் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு நிலைய முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்த தமது முறைப்பாடுகளை வாக்குச்சாவடிகளின் பொறுப்பாளர்கள் பதிவு செய்யவில்லை எனக்குறிப்பிட்ட ஐக்கிய தேசியக்கட்சிய்pன் நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல இதன் காரணமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நெருடல் இணையம்
|