பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மாகாண முதலமைச்சர் பிள்ளையானா? ஹிஸ்புல்லாஹ்வா? முறுகல் வலுக்கிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 11 May 2008

கிழக்கு மாகாணசபைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் முதலமைச்சர் நிலைக்கான போட்டி ஏற்பட்டுள்ளது.

தகவல்களின்படி மாகாணசபைக்கு தெரிவாகவுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களை மையமாக்கொண்டே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்ததன்படி தேர்தலில் யார் அதிக வாக்குகளை பெறுகிறாரோ அவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கிழக்கு மாகாணசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக எட்டு முஸ்லிம்களும் 6 தமிழர்களும் 4 சிங்களவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பேச்சாளர் அசாத் மௌலானா இது தொடர்பில் தெரிவிக்கும் போது பிள்ளையானுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக தமிழர்கள் மத்தியில் இருந்து 75 ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கிழக்கில் கடந்த பல காலங்களாக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர் இந்தநிலையில் பிள்ளையானுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று இந்த பதவிக்குறித்த தகவல் வெளியாகும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் இனியபாரதி இது குறித்த தெரிவிக்கையில் முதலமைச்சர் பதவி தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக்கொண்டார்.

இதில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் போட்டியிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் தமது விருப்பத்தெரிவு வாக்குகள் மீண்டும் எண்ணப்படவேண்டும் என கோரியுள்ளனர்.

இந்தநிலையில் மாகாணசபைத்தேர்தலில் அதிகப்படியான மற்றும் அதிகப்படியான உறுப்பினர்களை நம்பிக்கையை வென்றவரே முதலமைச்சராக பதவியில் அமர்த்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..