|
மட்டக்களப்பை அதிரவைத்த துப்பாக்கி வேட்டுக்கள்
இன்று இரவு மட்டக்களப்பு நகரில்; மட்டக்களப்பில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும், பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரும் சுடப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது.
ஆன்று இரவு 10 மணியளவில் மட்டக்களப்பு கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் அமைந்துள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வைத்து மேற்படி இருவரும் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுடப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாகவும். கொன்ஸ்டபிளின் நிலை கவலைக்கிடமானதாக இருப்பதாகவும் மட்டக்களப்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி பெற்றோல் நிரப்பு நிலையம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு 2யார் துரத்திலே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ் நிலையத்துக்கு மிக அருகில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு மணித்தியாலங்களாக மட்டக்களப்பு வவுணதீவு பக்கமாக துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றன. நீண்டகாலத்திற்குப் பின்னர் இரவின் அமைதியைக் குலைத்து கேட்கும் இத்துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் மட்டக்களப்பு நகரம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
எனினும் இத்துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் தொடர்பான மேலதிக தகவல் எதனையும் தற்போதைக்கு பெறமுடியவில்லை. செய்திகளை உறுதிப்படுத்திய பின்னர் மேலதிக செய்திகளை தருகின்றோம். தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.
மீனகன்
|