பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 May 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற முறை தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட முறை தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளதுடன், அதனை சிறிலங்கா அரசிற்கு கடிதம் மூலம் தெரிவிக்கவும் தீர்மானித்துள்ளது.

கிழக்கில் நடைபெற்ற தேர்தல் நீதியானதும், நேர்மையானதும் அல்ல எனப் பல அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தெரிவித்து வரும் நிலையில் அங்கு புதிதாக வன்முறைகள் உருவாகலாம் என்ற கவலை அமெரிக்காவிற்கு தோன்றியுள்ளது. மக்கள் தமக்கு விருப்பமான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க முடியாததே அதற்கு காரணம்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலின் போது அதிகளவான தேர்தல் வன்முறைகள் நடைபெற்றிருந்ததும், சில வாக்குச்சாவடிகளுக்கு அனைத்துலக கண்காணிப்பாளர் குழு அனுமதிக்கப்படாதது என்பன தமக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக அமெரிக்காவின் உள்விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் மீதான படுகொலைகள், கடத்தல்கள் என்பவற்றில் இருந்து கிழக்கு விடுதலை பெற்றுவிட்டதா என்பது தொடர்பாக அமெரிக்காவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பல இடங்களில் மறு வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அனைத்துலக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் கோரிக்கைகளை அமெரிக்கா மதிக்கின்றது. மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் முறைப்பாடுகள் தொடர்பாகவும், பிள்ளையான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாகவும் அமெரிக்கா கருத்தில் எடுத்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..