|
யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றம் அமுல்படுத்த வேண்டும் - எல்லாவல மேதானந்த தேரர் |
|
|
|
Wednesday, 14 May 2008 |
|
கிழக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் யார் முதலமைச்சராக வரப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளதாகவும் இந்த விடயத்தில் தமது கட்சிக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1971 இல் கிழக்கில் சிங்கள மக்கள் இருந்ததாகவும் விடுதலைப் புலிகள்தான் அங்கிருந்து சிங்களவர்களை விரட்டினர் எனவும் தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொத்துவில், புல்லுமலை, தோப்பூர், ஏறாவூர், அக்கரைப்பற்று, கல்முனை, ஜயந்திபுர உட்பட மேலும் பல இடங்களில் இருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அங்கு தற்போது வேறு இனத்தவர்களே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நெருடல் இணையம்
|