|
கருணாவை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் முடிவு |
|
|
|
Wednesday, 14 May 2008 |
|
இலங்கை போராளி இயக்கத் தலைவர்களில் ஒருவரான கருணாவை லண்டனில் இருந்து மீண்டும் இலங்கைக்கு அனுப்ப பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று தனி இயக்கம் தொடங்கி செயல்பட்டு வருபவர் கருணா. இவர் லண்டனுக்கு போலி விசா மூலம் வந்ததாகக் கூறி பிரித்தானிய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை முடிந்து கடந்த 9ம் தேதி கருணா விடுதலையானார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் அவரை விரைவில் இலங்கைக்கு அனுப்ப பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
நெருடல் இணையம்
|