|
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம் |
|
|
|
Wednesday, 14 May 2008 |
|
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற தீவிரமாக முயற்சிக்கும் பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் அப்பதவிக்கு தகுதியற்றவர்களென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;
பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவருமே கிழக்கினை ஆள்வதற்கு அடிப்படையில் தகுதியற்றவர்கள்.மோசடியும், வன்முறையும் நிறைந்த தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் முதலமைச்சருக்காக முட்டிமோதுவது வேடிக்கையானது.
எனவேதான் இவர்கள் இருவருமே முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர்களென நாம் கூறுகின்றோம்.
தேர்தல் முடிவுகளையே ஏற்றுக் கொள்ளாது நிராகரித்த ஐக்கிய தேசியக்கட்சியும், முஸ்லிம் காங்கிரஸும் பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவரும் முதலமைச்சராவதற்கு பொருத்தமற்றவரென்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
நெருடல் இணையம்
|