|
கருணாவின் மீது இலங்கை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் |
|
|
|
Thursday, 15 May 2008 |
|
கருணா, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால், அவர் மீது இலங்கையின் சட்டமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு துறைக்கான பேச்சாளர் கேஹிலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய அவர், ஊடகங்களி;ன் மூலம்; இது தொடர்பாக தகவல்களை அறிந்துக்கொண்டதாக குறிப்பிட்டார். கருணா உண்மையாக திருப்பியனுப்பபடுவராக இருந்தால், அவர் மீது இலங்கையின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். போலிக்கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் பிரித்தானியாவில் கைதான கருணாவிற்கு மூன்று மாத தண்டனைக்காலம் முடிவடைந்து அவர் பிரித்தானிய நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர்,தற்சமயம் குடிவரவு குடியகழ்வு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.இந்தநிலையில் அவர்,இலங்கைக்கு திருப்பியனுப்பப்படும் முன்னர் வேறு நாடு ஒன்றுக்கு அடைக்கலம் கோரும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெருடல் இணையம்
|