|
துணைப்படை பிள்ளையானை நியமிக்க எதிர்ப்பு: ஹிஸ்புல்லா உட்பட மூவர் தனித்து இயங்க முடிவு |
|
|
|
Friday, 16 May 2008 |
|
கிழக்கு மாகாண சபையின் முதல்வர் ஆசனத்துக்கு துணைப்படை பிள்ளையானை நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான மூவர் குழு தனித்து இயங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருப்பதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
கிழக்கின் முதலமைச்சராகும் தகுதி பிள்ளையானுக்கு இல்லை என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினர், கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் தம்முடன் முன்கூட்டியே ஆராயப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் சுவைபர் சாஹிர், ஜவாஹிர் ஆகியோர் தனித்து இயங்கும் முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உட்பட மூவர் ஆளும் கட்சிக்குள் இருந்துகொண்டே தனித்து செயற்படுவதற்கு எடுத்திருக்கும் முடிவானது இந்த விவகாரத்தில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலைமைகளினால் கிழக்கு மாகாண சபை கூட்டப்படும் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும் என்றும் கூறப்படுகின்றது.a
நெருடல் இணையம்
|