|
கொழும்பில் குண்டு வெடிப்பு: 10 காவல்துறையினர் பலி! காவல்துறையினரும் பொதுமக்களும் உட்பட 95 பேர் காய |
|
|
|
Friday, 16 May 2008 |
|
கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்க அருகில் சிறீலங்கா காவல்துறையின் பேருந்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 10 சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டதோடு மேலும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட மேலும் 95 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 7 பேர் கலகம் அடக்கும் காவல்துறையினர் எனக் கூறப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் சிறீலங்காவின் உயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
உந்துறுளியில் வந்த குண்டுதாரியே குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.காயமடைந்தவர்களில் 6 படையினரும் 52 காவல்துறையினரும் உள்ளடங்குகின்றனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறையினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குண்டுத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் இரு பேருந்கள், பாரவூர்தி, முச்சக்கர வண்டிகள் என 16 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்கு இலக்காகிய பேருந்துக்கு அருகில் உந்துறுளி ஒன்றும், முச்சக்கர வண்டியும் ஒன்றும் சேதடைந்து காணப்படுகின்றன. அருகில் உள்ள கட்டிடத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
காவல்துறையினர் மருதானையில இடம்பெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியோர் முன்னெடுக்கவிருந்த எதிர்ப்புப் பேரணிக்காகப் புறப்படத் தயாகராக இருந்த வேளையே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|