|
மகிந்த ராஜபக்ச முன்னிலையில் முதலமைச்சராக ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு |
|
|
|
Friday, 16 May 2008 |
|
சிறீலங்காவின் துணை இராணுவக்குழுவின் தலைவரும் ஆயுததாரியுமான பிள்ளையான் என்று அழைக்கப்படும்சிவனேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் வெற்றியீட்டிய ஆளும் அரசாங்க வேட்பாளர்கள் மாகாணசபை உறுப்பினர்களாக மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
சிறீலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி பிள்ளையானுடன் சேர்ந்து இயங்கப் போவதாக அதன் முக்கிய ஆயுததாரி துரைரட்ணம் தெரிவித்துள்ளார். இவருக்கு மாகாண அமைச்சர் பதிவி ஒன்றை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|