பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

எனக்கும் பிள்ளையானுக்கும் சுமூகமான உறவு உள்ளது: முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 17 May 2008

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன். எனது முடி இன்னும் ஒரிரு நாட்களில் தெரியும் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணசபை தொடர்பான எனது முடிவு பிள்ளையானுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். எனக்கும் பிள்ளையானுக்கும் உள்ள உறவு சுமூகமாக உள்ளது. நேற்றுக் காலையும் பிள்ளையானுடன் தொலைபேசியில் உரையாடினேன். மகிந்த ராஜபக்ச முஸ்லிம் சமூகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டார். எனக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறப்பட்டுள்ளன.

எனக்கு அரச உயர் மட்டத்திலிருந்து தொடர்ந்து அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாணசபைக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் வேதனையளிக்கின்றன. தமிழ் முஸ்லிங்கள் இடையே ஒரு இனக்கலவரத்தை ஏற்படுதிவிடுமோ என்ற அச்ச நிலை காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டியவனாக இருக்கின்றேன். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன். எனது முடிவு இன்னும் ஒரிரு நாட்களில் தெரியும். நான் இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றேன்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..