பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மன்னாரில் படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 25 படையினர் பலி- 50 பேர் காயம்- 6 உடலங்களு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 May 2008

மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 6 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பலியான, காயமடைந்த படையினரினதும், கைப்பற்றப்பட்ட உடலங்களினதும் ஆயுதங்களினதும் எண்ணிக்கை)

மன்னார் கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 6 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படையினரிடம் இருந்து

ஆர்பிஜிகள் - 02

ஆர்பிஜி எறிகணைகள் - 08

ஆர்பிஜி புரப்பலர்கள் - 08

ரி-56 ரக துப்பாக்கிகள் - 05

ரவைக்கூடுகள் - 61

குண்டுகள் - 48

நடுத்தர ரவைகள் - 6,985

நடுத்தர ரவைகள் இணைப்பிகளுடன் - 230

பிகே சுடுகுழல் - 02

பிகே ரவைகள் இணைப்பிகளுடன் - 1,885

பிகே ரவைகள் - 228

கிளைமோர் - 01

ரவைத்தடுப்பு அணிகள் - 10

தலைக்கவசங்கள் - 08

சப்பாத்துக்கள் - 17 சோடிகள்

பைகள் - 18

கொமாண்டோ குடிநீர் கொள்கலன் - 31

உரைப்பை - 150

என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், நெடுங்கண்டல்குள அணையால் முன்னேறும் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..