|
கடலடிக் கண்காணிப்புக் கருவிகளை வாங்கியும் பயன்படுத்த முடியாத நிலை! துறைமுக அதிகார சபைக்கு இப்படி இக் |
|
|
|
Sunday, 18 May 2008 |
|
கடலுக்கு அடியில் இடம்பெறும் செயற்பாடுகளைக் கண்டறிந்து கண்காணிக்கக்கூடிய "சோனார்" கருவிகளை கொழும்புத் துறைமுகத்தில் பொருத்துவதற்காகத் துறைமுக அதிகாரசபை கொள்வனவு செய்துள்ள போதிலும், கடற்படையின் ஒத்துழைப்பு இல்லாததால் இதனைப் பயன்படுத்த முடியாத இக்கட்டு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
கடந்த வாரத்துக்கு முந்திய வாரம் திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் கடற்படையின் விநியோக கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட சோனார் கருவி இலங்கையை வந்தடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ள ஆங்கில வார இதழ் ஒன்று எனினும்கடற்படையினர் இதனைப் பயன்படுத்துவதற்குத் துறைமுக அதிகார சபைக்கு அனுமதி வழங்கவில்லையெனத் தெரிவித்துள்ளது.கொழும்புத் துறைமுகத்தில் குறிப்பிட்ட கருவியைப் பாதுகாப்புக் காரணங்களால் பயன்படுத்த முடியாது என கடற்படையினர் தடுத்துவிட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினர் குறிப்பிட்ட கருவியை முழுமையாக ஆராய்ந்துள்ள போதிலும் இதுவரை அதனைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை அவர்கள் வழங்கவில்லையெனத் துறைமுக அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கைத் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் இது தொடர்பாகத் துறைமுகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சும் கடற்படையும் இலங்கைத் துறைமுக அதிகாரசபையை மற்றுமொரு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சோனார் கருவியைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நெருடல் இணையம்
|