|
இலங்கையின் மனித உரிமைகள் விசாரணைகளுக்கு வெளிநாடுகள் நிதியுதவி வழங்கவுள்ளன |
|
|
|
Tuesday, 20 May 2008 |
|
இலங்கையில் கடும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக நிதியுதவியை வழங்க அமெரிக்காவும் கனடாவும் முன்வந்துள்ளன.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட 4 ஆம் திகதி இடம்பெற்ற மூதூர் 17 தன்னார்வு தொண்டாளர்களின் கொலை மற்றும் திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணைகளுக்கே இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இந்த நிதி மூலம் வெளிநாடுகளில் உள்ள சாட்சிகள் செய்மதி மூலம் தமது சாட்சியங்களைத் தொடரமுடியும் என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிமுதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செய்மதிகளின் ஊடான சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி நிசந்த உடல்லகம தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவின் நிதியுதவிகள், வெளிநாடுகளில் உள்ள சாட்சிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன.
நெருடல் இணையம்
|