பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஐ.நா. மனித உரிமை குழு அங்கத்துவத்தை, சிறீலங்கா இழந்தது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 May 2008

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான வாக்கெடுப்பு நியூயோர்க்கில் இன்று புதன்கிழமை நடைபெற்றபோது, சில வாக்குகள் வித்தியாசத்தில், சிறீலங்கா தனது அங்கத்துவத்தை இழந்தது.

கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மகிந்த சமரசிங்க இது தொடர்பாக கருத்து வெளியிட்டபோது, சிறீலங்காவிற்கு அங்கத்துவம் கிடைக்குமென்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

தெற்காசிய நாடுகளுக்கான நான்கு அங்கத்துவ ஆசனங்களுக்கு, ஆறு நாடுகள் போட்டியிட்டன. சிறீலங்காவுக்கு 101 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், அதைவிட சற்று அதிகம் வாக்குகளைப் பெற்ற ஏனைய நாடுகள் இதற்குத் தெரிவாகின. சிறீலங்காவும் கிழக்குத் தீமோரும் தோல்வியைத் தழுவின.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் அங்கத்துவம் வகிக்கக்கூடிய 47 அங்கத்துவ நாடுகளில், நான்கு தெற்காசிய ஆசனங்களுக்காக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், ஜப்பான் 155, பாஹ்ரெய்ன் 142, தென்கொரியா 139, பாக்கிஸ்தான் 114, சிறீலங்கா 101, கிழக்கு தீமோர் 92 என்ற வகையில் வாக்குகளைப் பெற்றன.

சிறிலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், தென்கொரியா, கிழக்குத் தீமோர், பஹ்ரெய்ன் ஆகியவற்றில் பஹ்ரெய்னும் கிழக்குத் திமோரும் முதல் தடவையாக மனித உரிமைகள் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..