|
சுண்டிக்குளம் பகுதியில் கிபிர்த்தாக்குதல் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். |
|
|
|
Friday, 23 May 2008 |
|
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டுப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படைக்குச்சொந்தமான கிபிர் வானூர்திகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளன.

இந்த மிலேச்சத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் இரண்டு அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறிப்பலியாகியுள்ளதுடன் மூன்றுபேர் படுகாயமடைந்துள்ளனர்.

கற்பாடு மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 10 வீடுகள் முற்றாக அழிந்தன.
வீடுகளில் இருந்த 2 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நெருடல் இணையம்
|