|
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான விசாவுக்குப் பலத்த கட்டுப்பாடு |
|
|
|
Sunday, 25 May 2008 |
|
சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் கடுமையான விசா நடைமுறைகளை விதிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான சுற்றறிக்கை உள்ளுராட்சி நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இலங்கைக்குள் சேவையாற்றி வந்தன.
எனினும் தற்போது அவை இலங்கைக்கு எதிராகப் பிரசாரங்களை மேற்கொள்வதாக அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இதன்படி புதிதாக விநியோகிக்கப்படவுள்ள விசாக்களில் சுற்றுலா விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கு வதிவிட விசா வழங்குவதில்லை என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வதிவிட விசா வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் ஆலோசனைகளை நடத்தவேண்டும் என்றும்;
விசாக்கள் மூன்று வருடங்களுக்கு அதிகமான காலங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் மேலும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|