|
முஸ்லிம் வர்த்தகர்களை ஓட ஓட விரட்டித் தாக்கிய பிள்ளையான் குழு உறுப்பினர்கள் |
|
|
|
Tuesday, 27 May 2008 |
|
மட்டக்களப்பில் வியாழன் 22 05 08 அன்று பிள்ளையான் குழுவினருக்கும் காத்தான்குடி முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட பதற்றமான சு10ழ்நிலையைத் தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் மட்டக்களப்பில் வைத்து பிள்ளையான் குழுவினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது
வியாழன் மாலை 2 மணியளவில் மட்டக்களப்பு நகரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களுக்குட்புகுந்த பிள்ளையான் குழுவினர் அங்கிருந்த முஸ்லிம் வர்த்தகர்களை மிக மோசமாகத் தாக்கியுள்ளதுடன் அவர்களை ஓட ஓட வீதிகளில் விரட்டிச் சென்றும் தாக்கியுள்ளனர். கொட்டன்களாலும், தடிகளாலும் மற்றும் பைப்புக்களாலும் மிகமோசமான தாக்குதல்களுக்குள்ளான முஸ்லிம் வர்த்தகர்கள் அல்லா..அல்லா என்று கத்தியவாறு நகர மத்தியிலுள்ள பள்ளிவாசலை நோக்கி ஒடிச்சென்றதை காணக்கூடியதாகவிருந்தது.
பிள்ளையான் குழுவினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் தமிழ் மக்களுடைய கடைகளையும் ப10ட்டிவிட்டு வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அன்று மாலையளவிலே மட்டக்களப்பு நகரம் சனசந்தடியற்று அமைதியடைந்தது. தற்பொழுது இங்கு மயான அமைதி ஒன்று நிலவி வருகின்றது.
எனினும் நாளை விடிந்தால் என்ன நடக்கமோ என இரு இனமக்களும் பீதியில் உறைந்திருக்கின்றனர்.
மீனகன்
|