பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

எழுச்சிப் போராட்டங்களுக்கு தயாராகுங்கள்: மாணவர்களுக்கு திருமலை தமிழ் மக்கள் பேரவை அழைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 02 June 2008

தமிழீழத் தலைநகராம் திருகோணமலையில் நடைபெறும் சிங்களவரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தாயக மண்ணை மீட்கும் மாணவர் எழுச்சிப் போராட்டங்களுக்கு தயாராகுங்கள் என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழ மாணவர் எழுச்சி நாளினை (06.06.08) முன்னிட்டு திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை வெளியிட்ட அறிக்கை:

தமிழர் தம் வாழ்வியலை கல்வி வாய்ப்புக்களினை சரிவர பயனுடையதாக்கிய தமிழ் மாணவர் சமூகத்தின் கல்வியினை நசுக்குவதற்காக அவர்களின் உயர்கல்வி வாய்ப்பினை வெட்டுப்புள்ளிகள் மூலம் திட்டமிட்டு மட்டுப்படுத்திய சிங்களப் பேரினவாதிகளின் செயல் கண்டு குமுறிய இளையோரின் உள்ளக்கொதிப்பே விடுதலைக்கான போராட்டத்தினை தீவிரப்படுத்தியது.

எமது இனமும் மொழியும் காப்பாற்றப்படுவதுடன் மட்டும் நின்று விடாது எமது சிறப்பையும் உலகறியச் செய்துள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப். சீலன் மாணவராக இருந்த காலத்திலேயே திருகோணமலை இந்துக் கல்லூரியில் இனவெறி அரசின் சிங்கக்கொடியை பறக்கும் நிலையில் எரியூட்டிய வீரம் நிறைந்தது திருமலையிலேயே.

லெப். சீலன் வழியில் நின்று எம் தலைநகர் மீட்க எழுந்த இளையோரின் நினைவுகளினை மீட்டி பெருமிதத்தோடு வணக்கம் செலுத்தும் அதே வேளை சிங்கள இனவெறிப்படைகளால் 03.05.2006 அன்று திருகோணமலை நகர மையத்தில் முழங்காலில் நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்பட்ட உயர்கல்வி மாணவர்கள் மற்றும் இனவெறியால் செஞ்சோலை வளாகத்தில் உயிர் குடிக்கப்பட்ட உயர்தர மாணவிகள் 53 பேர் உள்ளிட்ட அனைத்து மாணாக்கர்களையும் உள்ளத்தில் இருத்துவோம்.

இனவெறியரின் நிலப்பறிப்புக்கள் உயிர்ப்பறிப்புக்களால் புண்பட்டுப்போய் இருக்கும் எம் தலைநகரத்து மாணவ உறவுகளே!

சிங்களப்படை வல்வளைப்பால் இடம்பெயர்க்கப்பட்ட மூதூர் பகுதி மாணவர்கள் ஈச்சிலம்பற்று மாணவர்கள் மற்றும் எல்லைப்புற மாணவர்கள் அனைவரதும் இடர்களினை துடைக்க மாணவர் எழுச்சி நாளில் உறுதி கொள்ளவேண்டும்.

இனிவரும் நாட்கள் எமக்கானவை என ஆக்கப்படல் வேண்டும்.

எமது உயிரினும் மேலான தாயகத்தின் தலைநகரில் நடைபெறும் சிங்களவரின் நில வன்பறிப்புக்கு எதிராக தாயக மண்ணிணை மீட்கும் மாணவ எழுச்சிப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்.

சிங்கள அரசின் கொடூர முகத்தை உலகறிய செய்ய ஒன்று திரளுங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..