பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை படுகொலை செய்வது குறித்து இரக்கமற்ற தன்மையோடு இந்தியா செயற்படுகிறது: வ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 03 June 2008

தமிழக கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் படுகொலை செய்வது குறித்த தமிழகத்தின் முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் பாராமுகமாகவும் இரக்கமற்ற தன்மையோடும் செயற்படுவதாக தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதும்,கொலை செய்வதும், அன்றாட நிகழ்வுகளாகி வரும்
மோசமான பிரச்சினையை தங்களின் உடனடியான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

45 நாட்கள் மீன் இனப்பெருக்க கால இடைவெளிக்குப் பிறகு, தமிழக மீனவர்கள் ஜூன் 1 ஆம் நாளில் இருந்துதான் கடலில் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். மறுநாளே, ஜூன் 2 ஆம் நாள் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற 20 வயது மீனவர், எண்- TN10 MFb 244 என்ற படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருக்கும்போது சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிறிலங்காவுடனான கச்சதீவு ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்களுக்கு கச்சதீவு அருகே சென்று மீன்பிடிக்க அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால், சிறிலங்கா கடற்படை முன்னறிவிப்பு எதுவும் இன்றி, தமிழக மீனவர்களைப் பயமுறுத்துகின்ற வகையில் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. துப்பாக்கியால் சுடுகிறது. இந்தியக் கடற்படை ஒரு நொண்டி வாத்தைப்போல செயலற்று இந்தியக்கடல் பகுதியில் அமர்ந்து இருப்பதால், சிறிலங்கா கடற்படை துணிச்சலாகத் தமிழர்கள் மீனவர்கள் மீது தங்களின் கொலைவெறித் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் தலையாய கடமையில் இருந்து இந்திய அரசு தவறிவிட்டது என்பதை மனவேதனையோடு குறிப்பிட விரும்புகிறேன். இந்திய அரசிடம் மீண்டும், மீண்டும் வேண்டுகோள் விடுத்தும், எமது கோரிக்கைகளுக்கு இந்திய அரசு பாராமுகமாக இருப்பதும், இரக்கமற்ற தன்மையோடு செயற்படுவதும் பெருந்துன்பத்தை அளிக்கிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தாங்கள் உடனடியாக சிறிலங்கா அரசுடன் பேசி, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவும், தமிழக மீனவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க இந்தியக் கடற்படைக்கு அறிவுறுத்த வேண்டியும் தங்களை அன்புடன் வேண்டுகிறேன் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..