|
கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழப்பு: ஒரு இலட்சம் பேர் இடம்பெயர்வு |
|
|
|
Monday, 02 June 2008 |
|
நாட்டின் தெற்கு மற்றும் மலையக பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக 7 பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், நீர்த் தேக்கங்கள் பலவும் உடைப்பெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழையினால் பல இடங்களில் போக்குவரத்துகள், மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளையோ மீட்பு நடவடிக்கைகளையோ மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேகாலை மாவட்டங்களே மழையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நெருடல் இணையம்
|