|
அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு |
|
|
|
Friday, 06 June 2008 |
|
அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்நாள் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது.
தமிழ்ப் பெண்களான இந்த இருவரும் ஒலுவில் தென்னந்தோட்டப் பகுதி வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே அதிகாலை 1:00 மணியளவில் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் அவரது 13 வயது மகளும் மேற்படி வீட்டில் தங்கியிருந்த போது, அதிகாலை 1:00 மணியளவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்த இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து காவல்துறையினர், இருவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மேலும், நால்வரைத் தேடி வருவதாகவும், விசாரணையின் பின் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தாயும் மகளும் மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|