பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் 16 பேர் படுகொலை- 53 பேரைக் காணவில்லை- 20 பேர் காயம்- 30 பேர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 06 June 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:

இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை. இருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். அவ்வாறு எனில் ஏன்? யாரை ஏமாற்றுவதற்காக அனைத்துக்கட்சி மாநாட்டை நடத்துகின்றீர்கள்? பயங்கரவாதப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்துக்கட்சி மாநாடு தேவையில்லையே?

இந்த நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளையும் இரண்டாகப் பிளவுபடுத்தும் வேலையை அரச தலைவர் முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் அவரால் பிளவுபடுத்த முடியவில்லை. ஏனெனில் நாம் மக்களின் பிரதிநிதிகள், கோடிகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகின்றவர்கள் அல்ல.

அரச தலைவர், இப்போது டக்ளசையும், ஆனந்தசங்கரியையும் பிரித்து வேடிக்கை பார்க்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்திவிட்டதாக அரசு மார்தட்டுகின்றது. ஆனால், அங்கு அரச ஜனநாயகப் படுகொலையினையே செய்துள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்குள்ள மக்களின் நிம்மதி பறிபோய்விட்டது. இன முறுகல்கள் அதிகரித்துள்ளன. இதனால் நாளாந்தம் வன்முறைகள் நடக்கின்றன.

மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 27 பேரைக் காணவில்லை. 20 பேர் காயப்படுத்தப்பட்டுள்ளனர். 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, திருகோணமலை மாவட்டத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 26 பேர் காணாமல் போய் உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இதே நிலைதான் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், இனமுறுகல் அனைத்தையும் அரசே திட்டமிட்டுச் செய்கின்றது. அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஆயுதக்குழுவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவின் பெயர் சூட்டப்பட்ட விளையாட்டு மைதானம் ஒன்றின் பெயரை உடனடியாக மாற்றுமாறு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் நிலை மேலும் மோசமடைந்து செல்கின்றது. இதற்கான அனைத்துப் பொறுப்புக்களையும் இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றார் அவர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..