|
இலங்கைக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளோம் - இஸ்ரேல் |
|
|
|
Thursday, 05 June 2008 |
|
இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது.
இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. புலிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக இல்ரேஸ் எதுவித நன்மையையும் பெற வாய்ப்பில்லை.
இலங்கைக்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை இல்ரேஸ் வழங்கவுள்ளது என இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|