பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow கிழக்கின் மோசமான நிலைமையைவடக்கிலும் ஏற்படுத்துவதற்கு முயற்சியா?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கிழக்கின் மோசமான நிலைமையைவடக்கிலும் ஏற்படுத்துவதற்கு முயற்சியா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 14 October 2005

அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ். குடா நாட் டில் அண்மைய நாள்களாக இடம்பெற்றுவரும் வன்முறைகளும் படுகொலைகளும் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும் பேரச் சத்தையும் கொடுத்திருக்கின்றன.இந்தச்சம்பவங்களின் உச்சமாகக் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் சுமார் 18 மணிநேர இடைவெளியில் இரண்டு கல்லூரிகளின் அதிபர்கள் அடுத்தடுத்துச் சுட்டுக்கொல்லப் பட்டமை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக் கின்றது.

அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மாகாணத் தின் நிலைமையை வடக்கிலும் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கொண்டுவருவதற்கான எத்தனமே இங்கு இப்போது இடம் பெறுவதாகக் கருதவேண்டியுள்ளது. அத்தகைய சந்தேகமே இப் போது குடாநாட்டு மக்களுக்கு எழுந்திருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் கருணாகுழு என்ற பெயரில் ஒட் டுப்படை ஒன்றைப் பயன்படுத்தி இருள்யுத்தம் ஒன்றை நிழல்போர் ஒன்றை கட்டவிழ்த்துவிட்ட அதேசக்திகள் இப் போது தமது கைவரிசையை வடக்கின்பால் திருப்பி அந்த யுத் தத்தைக் குடாநாட்டிற்கும் விஸ்தரிக்கமுயற்சிக்கிறார்கள் என்றே மக்கள் ஐயுறுகின்றனர்.
அப்படியானால் கிழக்கில் கருணாவின் பெயரால் அமைந்த ஒட்டுப்படை போல, குடாநாட்டில் யாரின் பெயரால் இந்த இருள்யுத்தம் விஸ்தரிக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுவது இயல்பானதே. முதலில் ஒரு கொலை, அதற்குப் பதிலாக மற் றொரு கொலை. அந்தக் கொலைக்குப் பழிவாங்க இன்னுமொரு கொலை... என்று தொடரும் இந்த வன்முறைகளின் பின்னணி யார் என்பதும், யாரின் பெயரால் இந்தக் கைங்கரியங்கள் அரங் கேற்றப்படுகின்றன என்பதும் மக்களுக்குத் தெரியாதவை யல்ல. மக்கள் அவ்வளவு முட்டாள்களுமல்லர்.
""இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள தமிழர் தாயகப் பகுதியில் கொலைகளும் வன்முறைகளும் கட்டுமட் டில்லாமல் அதிகரித்துள்ளன. இத்தகைய வன்முறைகளைப் புரிந்துவிட்டு புலிகள் மீது பழிசுமத்தும் அரசியல் சதித்திட்டம் ஒன்று அரங்கேறுகின்றது. இந்த மோசமான நிலையைக் கண் காணிப்புக்குழு கவனத்திற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு வலியுறுத்தும் கடிதம் ஒன்றை விடுதலைப் புலிகளின் அரசி யல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு எழுதி அனுப்பி இன்னும் ஒரு வாரம்கூட ஆக வில்லை. அதற்குள் நிலைமை மோசமான கட்டத்தை அடைந்துவிட்டது. அரசுப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள குடாநாட்டில் ""பொழுது ஒரு கொலை; மணிக்கொரு மோச மான வன்முறை'' என்ற படுபயங்கரமான நிலைமை மக் களைச் சூழ்ந்துவருகின்றது.
""நுட்பமாகத் திட்டமிட்டுப் புலிகள் இயக்கம் மீது பழியைச் சுமத்தும் அரசியல் நோக்கங்கள் இந்த வன்முறைச் சம்பவங் களுக்குப் பின்னால் உள்ளன என்பதில் எங்களுக்குச் சந்தேக மேயில்லை'' என்று தமிழ்ச்செல்வன் அடித்துக் கூறியிருப் பதை நிரூபிக்குமாற்போன்ற சம்பவங்கள் குடாநாட்டில் இடம் பெற்று வருகின்றன. அப்பாவிகளையும் கொன்றொழிக்கும் ஈவு இரக்கமற்ற போக்கு நமது மண்ணில் நுழைந்திருக்கின் றது. அடுத்தகணம் என்ன வன்முறை நிகழுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. யுத்தநிறுத்தம் என்ற மாயைக்கு இடையில்தான் அந்த வாய்ப்பைப் பயன்படுத் தித்தான் இந்த மோசமான நிலைமை உருவாக்கப்பட்டிருக் கிறது. அதுவும் அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் தமது போராளிகளுக்கு அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து, அதன்காரணமாக அரசுக் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களில் உள்ள தமது அரசியல் போராளி களை விடுதலைப் புலிகள் அங்கிருந்து வாபஸ் பெற்றுள்ளனர் என அறிவித்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன் படுத்தியே இந்த நெருக்கடிச் சூழல் வடக்கில் உருவாக்கப் பட்டிருக்கின்றது.
"யாழ். மாவட்டத்தில் கொலைகள், களவுகள், கொள்ளை கள், கொலை அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பாவனை, குழு மோதல்கள், பெண்கள் மீதான வன்முறைகள் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலீஸாரும் படைத்தரப்பினரும் இந்த அடாவடித்தனத்துக்கும் அத்துமீறல்களுக்கும் துணைபோகின் றனர்' இவ்வாறு விடுதலைப் புலிகளின் யாழ்.அரசியற் றுறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி கடந்த செவ்வாயன்று இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் யாழ். மாவட்டப் பிரதிநிதிகளிடம் நேரில் சுட்டிக்காட்டியிருந்தார். அப்படி அவர் தெரிவித்த அன்றிரவே சமூகத்தின் மூத்த பிரஜைகளுள் ஒருவரான கோப்பாய் அதிபர் தமது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.
வன்முறைகள், சமூகச் சீர்கேடுகள், அடாவடித்தனங்கள் போன்ற அச்சமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அல்லது அவற்றுக்குத் தூபமிடுவதன் மூலம் கிழக்கு நிலைமையை வடக்கில் ஏற்படுத்தலாம் என்று நினைப் பவர்கள், அத்தகைய செயற்பாடுகள் வடக்கில் கொஞ்ச நஞ்சம் தமக்கு இருக்கக் கூடிய ஆதரவுத் தளத்தைக் கூட இழந்து போகச் செய்யும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.
அதுமட்டுமல்ல யுத்தநிறுத்தத்தை விரைந்து கெடுக்கும் நடவடிக்கைகள் இவை. இவற்றின் விளைவு விபரீதமாகும் என்பதை புரிந்துகொள்வது நல்லது.

 


uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..