|
தமிழீழம் எங்கும் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் சிறப்புற நடைபெற்று வருகிறது. |
|
|
|
Friday, 06 June 2008 |
|
தமிழீழ மாணவர் எழுச்சிநாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 6ஆம் நாள் தமிழீழம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்கள் மீதி திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில்
தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
தமிழ் மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தியாகி பொன் சிவகுமார், மேஜர் முரளி ஆகியோர் நினைவிலான தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நினைவுகள் இன்று வன்னியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வுகள் தமிழீழ மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. தியாகி பொன் சிவகுமாhரின் 34வது நினைவு நாள் நேற்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|